’36 வயதினிலே’ பாணியில் ஆர்.பி.ஐ கவர்னரை கேள்வி கேட்டு அசத்திய சிறுவன்

rbiசமீபத்தில் வெளியான ’36 வயதினிலே’ என்ற படத்தில் ஜோதிகாவின் மகள் கேரக்டர் இந்திய குடியரசு தலைவரே அசந்து போகும் அளவுக்கு ஒரு கேள்வியை கேட்பார். இதே போன்ற ஒரு சம்பவம் தற்போது உண்மையில் நடந்துள்ளது. 8ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன், இந்திய ரிசர்வ வங்கியின் கவர்னரையே ஆச்சரியப்படுத்தும் இந்திய பொருளாதாரம் குறித்து ஒரு கேள்வியை கேட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பையில் நடந்த விழா ஒன்றில் பள்ளி குழந்தைகளுடன் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் உரையாடினார். அப்போது 8ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் எழுந்து கேட்ட ஒரு கேள்வி ரகுராம் ராஜனை மட்டுமின்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த சிறுவன் அப்படி என்ன கேள்வி கேட்டான். இதோ இதுதான் அந்த கேள்வி, “‘சார், அமெரிக்காவின் பணவியல் கொள்கைகளில் ஏற்படவுள்ள மாற்றம் ரூபாயின் மதிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற செய்தி பரவி வருகிறது. இதேபோல் எப்போது இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களால் உலக பொருளாதாரத்தில் பல்வேறு நாடுகள் பாதிக்கப்படும் நிலை உருவாகும்’. இதுதான் அந்த சிறுவன் கேட்ட கேள்வி.

இந்த கேள்வியை கேட்ட அடுத்த நொடியே ரகுராம் ராஜன் ஆச்சர்யத்தில் ஆழ்ந்து கைதட்டி அந்த சிறுவனை பாரட்டினார். ”முதலில் இந்த கேள்விக்கு பாராட்டை தெரிவித்தே ஆகவேண்டும், அமெரிக்கா பணவியல் கொள்கையில் மாற்றம் கொண்டு வரும் போது மற்ற நாடுகளை பாதிக்காத வண்ணம் தயாரிக்க வேண்டும், அதுமட்டுமின்றி நமது கொள்கைகள் எந்த ஒரு நாட்டையும் பாதிக்காத வண்ணம் வளர்ச்சியை நோக்கியதாக இருக்க வேண்டியது அவசியம் என்றார். மேலும் அந்த சிறுவனிடம் நீ எனது வயதில் இருக்கும் போது இந்திய பொருளாதாரம் உலகின் டாப் 3 பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும் என்று கூறினார்

Leave a Reply