ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி வரலாற்றில் புதிய சாதனை

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி வரலாற்றில் புதிய சாதனை

1ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்த சென்னை அணி நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் கோவா அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் கோவா 5-4 என்ற கோல் கணக்கில் சென்னையை வீழ்த்தி வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் இரண்டு அணிகளும் கோல் மழை பொழிந்தது.  சென்னை அணி 4, 13, 28, 88வது நிமிடங்களில் நான்கு கோல்கள் அடித்தது. அதேபோல் கோவா அணியும் சிறப்பாக விளையாடி ஐந்து கோல்கள் அடித்தன. மொத்தத்தில் இந்த ஆட்டத்தில் மொத்தம் 9 கோல்கள் போடப்பட்டுள்ளன

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி வரலாற்றில் ஒரே ஆட்டத்தில் 9 கோல்கள் அடிக்கப்பட்டது இதுவே முதல்முறை. இதற்கு முன்னர் அதிகபட்சமாக 7 கோல்கள் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தா, புனே அணிகள் மோதுகின்றன

Leave a Reply