9 வயது தங்கையின் பாலியல் பலாத்காரத்திற்கு உதவிய அக்கா கைது
குவாலியர் நகரில் உடன்பிறந்த தங்கையை தனது கணவர் மற்றும் அவரது நண்பர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய உதவியாக இருந்த அக்காவை போலீசார் கைது செய்துள்ளனர்.
குவாலியரில் உள்ள மஹாராஜபுரா என்ற பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியின் பெற்றோர் சமீபத்தில் மரணம் அடைந்துவிட்டதால் அவர் தனது அக்கா மற்றும் அக்கா கணவரின் வீட்டில் வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் சிறுமியின் அக்கா கணவர் உட்பட நால்வர் அந்த சிறுமியை தொடர்ந்து கற்பழித்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
சிறுமியின் பரிதாப நிலையை கண்ட அந்த பகுதி மக்கள் சிலர் சிறுமிக்கு நேர்ந்த அவலநிலை குறித்து சைல்ட் லைன் அமைப்பினரிடம் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த வீட்டிற்கு வந்த சைல்ட் லைன் அமைப்பினர், கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் சேர்த்தனர்
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், அந்த சிறுமியின் அக்கா, அக்கா கணவர் உட்பட மூவரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் இருவரை தேடி வருகின்றனர்.