’90 எம்எல்’ ஆண் ஆதிக்கத்திற்கு எதிரான படம்: ஓவியா
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரும்புகழ் பெற்ற நடிகை ஓவியா நடித்த ’90 எம்எல்’ திரைப்படம் மார்ச் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது இந்த படத்திற்கு கண்டனங்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஓவியா, ’90 எம்எல் திரைப்படம் ஆண் ஆதிக்கத்திற்கு எதிரானது. பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவது. ஆண்கள் இதுபோன்ற காட்சிகளில் நடிக்கும் போது ஏதும் சொல்லாத சமுதாயம் பெண்களை மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்? ஆண்களுக்கு ஒரு நியாயம், பெண்களுக்கு ஒரு நியாயமா?’ என ஆவேசத்துடன் கூறியுள்ளார்.
மேலும் ‘நான் என்ன நிர்வாணமாகவா நடித்து விட்டேன். முத்தம் கொடுப்பது அவ்வளவு பெரிய தப்பா? கதாபாத்திரத்திற்கு தேவையானதை மட்டுமே நடித்திருக்கிறேன். எனக்கு காதலில் நம்பிக்கை உள்ளது. ஆனால் திருமணத்தில் நம்பிக்கை இல்லை’ என கூறியுள்ளார்.
ஆபாசத்துக்கும், கவர்ச்சிக்கும் என்ன வித்தியாசம் என்பது பார்ப்பவர்களின் பார்வையை பொறுத்தது என்றும் ஒவியா இந்த படம் குறித்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.