கோவிலுக்குள் சென்ற 90 வயது தலித் முதியவரை உயிருடன் கொளுத்திய கொடூரம்

கோவிலுக்குள் சென்ற 90 வயது தலித் முதியவரை உயிருடன் கொளுத்திய கொடூரம்
temple
தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்னும் பழங்கால நடைமுறை இன்னும் சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அவ்வாறு மீறி கோவிலுக்குள் செல்லும் தாழ்த்தப்பட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உ.பி. மாநிலத்தில் கோவிலுக்குள் சென்ற 90 வயது முதியவர் ஒருவரை ஈவு இரக்கமின்றி உயிரோடு கொளுத்தியுள்ள ஒரு திடுக்கிடும் சம்பவம் நேற்று நடந்துள்ளது.

உ.பி. மாநிலத்தில் உள்ள ஹமீர்பூர் என்ற பகுதியில் மைதானி பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் அந்த பகுதியை சேர்ந்த 90 வயது தலித் முதியவர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகனுடன் சென்றார். கோவில் வாசலில் சஞ்சய் திவாரி என்பவர் அந்த முதியவரையும், அவரது குடும்பத்தினர்களையும் கோயிலுக்குள் செல்ல கூடாது என்று தடுத்துள்ளார். ஆனால் அதையும் மீறி அந்த முதியவர் கோயிலுக்கு செல்ல முயற்சித்துள்ளார். ஏற்கனவே ஆத்திரம் அடைந்த சஞ்சய், அந்த முதியவர் மீது தாக்குதல் நடத்தியதுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீயும் வைத்துள்ளார்.

இந்த சம்பவத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கோயிலுக்கு வந்த ஏராளமான பக்தர் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.  இதனை பார்த்த மற்ற பக்தர்கள் சஞ்சய் திவாரியை அடித்து உதைத்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சஞ்சய் திவாரியை கைது செய்தனர்.

Leave a Reply