9,10,11,12 ஆம் வகுப்பு பாடங்கள் கணினிமயமாக்கம்: அமைச்சர் செங்கோட்டயன்

9,10,11,12 ஆம் வகுப்பு பாடங்கள் கணினிமயமாக்கம்: அமைச்சர் செங்கோட்டயன்

தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையில் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படுவதாக அறிவித்த நிலையில் , தற்போது 1,6,9 மற்றும் 11 ஆகிய வகுப்பு மாணவா்களுக்கான புதிய பாடத்திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி அவா்களால் நாளை மறுநாள் வெளியிடும் என்று தற்போது அறிவித்துள்ளனா்.

முதல்கட்டமாக, 1 மற்றும் 9-ம் வகுப்புக்கான தமிழ், ஆங்கில பாடங்கள் அடங்கிய பாடநூல்களின் முதல் பாகம் முழுமையாக முடிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அனைத்து பாடமும் முடிக்கப்பட்டு வெளியிடப்பட உள்ளது என்று அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். பாடத்திட்டத்தின் புத்தக வடிவமைப்பினை சிறப்பான முறையில் உருவாக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. பின்னா் விலை உயர்ந்த காகிதத்தில் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் பாடப்புத்தகத்தை மாணவர்கள் சுமந்து செல்லக்கூடாது என்ற வகையில் 3 கட்டங்களாகவும் பிரித்து வைத்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயா்நிலை படிக்கும் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து பாடத்திட்டமும் கணினிமயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் கல்வியில் சிறந்து விளங்கும் முதன்மையான மாநிலமாக திகழும் என்று கூறினார்.

Leave a Reply