ரசிகர்களுக்கு விஜய் தரும் மிகப்பெரிய ஆச்சரியம்
இளையதளபதி விஜய் மீது சுமத்தப்படும் ஒரு பெரிய குற்றச்சாட்டு அவர் தன்னுடைய கேரக்டருக்காக மெனக்கெடுவது இல்லை என்பதுதான். இரு வேடங்களில் நடித்த ‘புலி, அழகிய தமிழ்மகன் உள்ளிட்ட சில படங்களில் கூட ஒரு கேரக்டருக்கும் இன்னொரு கேரக்டருக்கும் அதிக கெட்டப் வித்தியாசமின்றி நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை பொய்யாகும் வகையில் ‘விஜய் 60’ படத்தில் விஜய் தனது இரண்டாவது கேரக்டருக்காக 10 கிலோ எடையை குறைத்துள்ளாராம். மேலும் வித்தியாசமான மேக்கப்பில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய மாற்றத்துடன் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தில் அவர் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். சாதாரண தோற்றம் கொண்ட கேரக்டரின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், வித்தியாசமான தோற்றத்துடன் கூடிய கேரக்டரின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பரதன் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் முக்கிய வேடத்தில் சதீஷ் நடிக்கின்றார். இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.