உ.பி தேர்தல்: சுயேட்சை வேட்பாளராக நிற்கும் 95 வயது மூதாட்டி

உ.பி தேர்தல்: சுயேட்சை வேட்பாளராக நிற்கும் 95 வயது மூதாட்டி

உத்தரபிரதேச மாநில தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து, வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த தேர்தல் களத்தில் சுயேட்சைகளும் அதிகமான அளவில் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கேதர்நாத் என்ற தொகுதியில் 95 வயது மூதாட்டி ஜல் தேவி என்பவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 95 வயதானாலும் தன்னால் இயன்ற கடமைகளை சமூகத்திற்கு செய்ய முடியும் என்றும் தான் இந்த தொகுதியில் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்றும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மேலும் இந்த வயதிலும் அவர் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு தெருத்தெருவாக பிரச்சாரம் செய்து வருகிறார். இவருடைய பிரச்சாரத்திற்கு அவருடைய உறவினர்கள் உதவி செய்து வருகின்றனர்.

Leave a Reply