96ல் ரஜினி கட்சி ஆரம்பித்திருந்தால் வெற்றி பெற்றிருப்பார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
ரஜினிகாந்த் ஒருவேளை 96ல் கட்சி ஆரம்பித்திருந்தால் வெற்றி பெற்றிருப்பார் என்றும் ஆனால் தற்போது அவருக்கு 70 வயதாகிவிட்டதால் இனிமேல் அவர் கட்சி ஆரம்பிப்பது சந்தேகம்தான் என்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கல்ந்து கொண்டபோது பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசியபோது, ‘ரஜினி நல்ல மனிதர். அவருடைய வெகுளி குணத்துக்கு அரசியலில் இறங்குவது சந்தேகம் தான். ரஜினிக்கு 70 வயதாகிவிட்டது. இனி 32 மாவட்டங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்து தேர்தலில் வெற்றி பெறுவது என்பது முடியாத காரியம். ஒரு வேளை 1996ம் ஆண்டிலேயே கட்சி ஆரம்பித்திருந்தால் வெற்றி வாய்ப்பு கிடைத்திருக்கும்.
மேலும் கமல் கட்சி ஒரே ஒரு தேர்தலுக்கு பின்னர் காணாமல் போய்விடும் என்றும், திமுக தலைவர் ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என்பது கருத்துக்கணிப்பு அல்ல. கருத்துத்திணிப்பு என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.