’96’ பட நிறுவனத்திற்கு தடை போட்ட நடிகர் சங்கம்

’96’ பட நிறுவனத்திற்கு தடை போட்ட நடிகர் சங்கம்

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த மாதம் வெளியான ’96’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசுல் அளவிலும் மிகப்பெரிய தொகையை வசூல் செய்தது. இருப்பினும் இந்த படத்தில் நடித்த விஜய்சேதுபதிக்கு தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பேசிய சம்பளத்தை கொடுக்கவில்லை என தெரிகிறது. அதுமட்டுமின்றி இந்நிறுவனம் தயாரித்த முந்தைய படங்களில் நடித்த ஹீரோக்களுக்கும் சம்பள பாக்கி வைத்துள்ளது.

இந்த நிலையில் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு நடிகர், நடிகைகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டாம் என தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் ‘துப்பறிவாளன்’ படத்துக்காக விஷாலுக்கும், ‘வீரசிவாஜி’ படத்துக்காக விக்ரம்பிரபுவுக்கும் ‘9’ ‘படத்துக்காக விஜய்சேதுபதிக்கு ஊதிய பாக்கி வழங்காமல் உள்ளது.

திரைப்படங்களை திரையிடும் கடைசி நேரத்தில் நடிகர்களின் சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தயாரிப்பு நிறுவனங்கள் ஊதியம் வழங்காமல் படங்களை திரையிடுகிறது.

பட வெளியீட்டின் போது இக்கட்டான சூழ்நிலையில் நடிகர்கள் வருமானத்தை விட்டுக்கொடுத்து தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்து வருகிறது. ஆனால் இதனை பலவீனமாக கருதி ஒப்புக்கொண்ட சம்பளத்தை தரமறுப்பதும் வழக்கமாகியுள்ளது. இதுபோன்று செயல்படும் தயாரிப்பு நிறுவனம், தயாரிப்பாளர்களுக்கு நடிகர், நடிகையர் ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என நிர்வாகக் குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அநத அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply