டிரம்பின் முஸ்லீம் நாடுகள் தடை சரியான நடவடிக்கையே. பாஜக எம்பி

டிரம்பின் முஸ்லீம் நாடுகள் தடை சரியான நடவடிக்கையே. பாஜக எம்பி

அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து ஒவ்வொரு நாளும் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அவர் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவுகளில் ஒன்று ஈரான், ஈராக், சிரியா, லிபியா உள்ளிட்ட இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் வர 90 நாட்களுக்குத் தடை விதிக்கப்படும் என்ற உத்தரவுதான்.

இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லீம்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பாஜ எம்பி யோகி ஆதித்யா நாத் என்பவர் இந்த உத்தரவு சரிதான் என்று கருத்து தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் தொகுதி எம்பியாக இருக்கும் யோகி ஆதித்யாநாத், புலந்த்சஹார் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்ட்தில் நேற்று பேசினார். அப்போது அவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் குடியேற்ற தடை போன்றதொரு தடை இந்தியாவுக்கும் கண்டிப்பாக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இவருடைய கருத்துக்கு முஸ்லீம் அமைப்புகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.

Leave a Reply