பில்கேட்ஸ்: உலகின் ஒரே டிரில்லியனர் ஆகும் வாய்ப்பு

பில்கேட்ஸ்: உலகின் ஒரே டிரில்லியனர் ஆகும் வாய்ப்பு

மில்லியனர், பில்லியனர் ஆக வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தொழிலபதிகளின் கனவாக இருக்கும். ஆனால் இதுவரை யாரும் டிரில்லியனரை பற்றி யோசித்ததே கிடையாது. ஒரு டிரில்லியன் என்றால் 1000 பில்லியன் ஆகும். அதாவது ஒரு டிரில்லியனுக்கு ஒன்றுக்கு பின்னர் 12 சைபர்கள் வரும். இந்த அளவுக்கு டாலரில் பணம் வைத்திருக்கும் நபர் இதுவரை உலகில் இல்லை. ஆனால் டிரில்லியனாராகும் தகுதி உலகில் பில்கேட்ஸ் அவர்களுக்கு மட்டுமே தகுதி இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளரான பில்கேட்ஸ் அவர்களின் சொத்து மதிப்பு 2006ஆம் ஆண்டில் 50 பில்லியனாக இருந்தது. கடந்த ஆண்டு அது 75 பில்லியனாக உயர்ந்தது. அவரது வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 11% என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதே வேகத்தில் அவருடைய வளர்ச்சி சென்றால் பில்கேட்ஸ் தனது 86வது வயதில் டிரில்லியனாக மாறிவிடுவார் என்று அந்த ஆய்வு கூறுகிறது. இதற்கு இன்னும் 25 ஆண்டுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply