சசிகலாவின் மாஸ்டர் பிளான் மக்களிடம் எடுபடுமா?

சசிகலாவின் மாஸ்டர் பிளான் மக்களிடம் எடுபடுமா?

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்தவுடன் ஒருசில நாட்களில் அதிமுக பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க முடிந்த சசிகலாவிற்கு, முதல்வர் பதவியை இன்னும் பிடிக்க முடியவில்லை. இவ்வளவிற்கும் எப்போது ராஜினாமா செய்ய சொன்னாலும் ஓபிஎஸ் தயாராக இருந்தாலும், அவரை முதல்வர் பதவியில் இருந்து வெளியேற்ற முடியாமல் சசிகலா தவிக்கின்றது.

இதற்கு முக்கிய காரணம் ஓபிஎஸ் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கை மற்றும் மக்கள் மத்தியில் ஏற்பட்ட நற்பெயர். அதைவிட முக்கிய காரணம் மத்திய அரசு பன்னீருக்கு கொடுக்கும் முழு ஆதரவு. அதுமட்டுமின்றி பன்னீர் பதவிக்கு ஆபத்து வந்தால் உதவ தயாராக இருக்கும் திமுக

இத்தனை களேபேரத்திலும் முதல்வர் பதவியை சசிகலா பிடித்தால் பெரும் எதிர்ப்பு ஏற்படும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளதாம். ஆனால் அனைத்து கோபத்தையும் தன்னுடைய ஒரே ஒரு கையெழுத்து போக்கிவிடும் என்று மாஸ்டர் பிளான் போட்டுள்ளாராம் சசிகலா. மதுவிலக்கில் கையெழுத்திடுவதுதான் சசிகலாவின் மாஸ்டர் பிளானாம். இந்த மாஸ்டர் பிளானுக்கு மக்களிடம் எடுபடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply