ஷீலா பாலகிருஷ்ணனை தொடர்ந்து மேலும் 2 அதிகாரிகள் பதவி விலகல்

ஷீலா பாலகிருஷ்ணனை தொடர்ந்து மேலும் 2 அதிகாரிகள் பதவி விலகல்

தமிழக அரசின் ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணனை தொடர்ந்து மேலும் இரண்டு முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளும் திடீரென பதவி விலகியுள்ளதால் தலைமை செயலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்ட தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்த காரணமே இன்னும் தெரியாத நிலையில் தற்போது முதன்மைச் செயலாளர் கே.என். வெங்கட்ரமணன் மற்றும் முதலமைச்சரின் செயலாளர் ஏ.ராமலிங்கம் ஆகியோரும் தங்கள் பொறுப்பில் இருந்து விலகியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

1987ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணிப் பிரிவைச் சேர்ந்தவரான‌ கே.என். வெங்கட்ரமணன், கடந்த 2012 ஆம் ஆண்டே ஓய்வு பெற்றுவிட்டார். ஆனாலும், கடந்த 5 ஆண்டுகளாக பதவி நீட்டிப்பு செய்யப்பட்டிருந்தார். இவரது பதவிக் காலம் வரும் மே மாதம் நிறைவடையது. இந்நிலையில் திடீரென அவர் விலகியுள்ளது மர்மமாக உள்ளதாக தலைமைச்செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.

அதேபோல் 1996ஆம் ஆண்டு தமிழக பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான முதலமைச்சரின் செயலாளர் ஏ. ராமலிங்கம் அவர்களும் திடீரென பதவி விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply