ஆம் ஆத்மி கட்சியின் அங்கீகாரம் ரத்தா? கொதிக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்வராக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றதில் இருந்து அவருக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில் முறைகேடாக ஆம் ஆத்மி கட்சிக்கு நன்கொடை வந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அக்கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என்று தேர்தல் கமிஷனுக்கு வருமான வரித்துறை பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து தனது டுவிட்டரில் ஆவேசமாக கூறியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், “ஆம் ஆத்மி கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மோடி துடிக்கிறார். அவர் வெட்கம் கெட்ட சர்வாதிகாரி. மோசமான, அசிங்கமான தந்திரத்தை கையாள்கிறார். கோவா, பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா மோசமான தோல்வியை தழுவும்.
வெற்றி பெறும் கட்சியான ஆம் ஆத்மியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முயற்சிக்கிறார் என்று கூறியுள்ளார்.