குடமுழுக்கு சிறப்பு யாகத்தின் போது தீ விபத்து. காளகஸ்தியில் பரபரப்பு
ஆந்திர மாநிலத்தில் திருப்பதி திருமலையை அடுத்து பெரும்புகழ் பெற்ற கோவில் காளகஸ்தி கோயில்தான். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வழிபடுவார்கள்
இந்நிலையில் இந்த கோயிலில் நேற்று குடமுழுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. அப்போது யாகத்தில் அதிக அலவினால தீ இருந்ததால் திடீரென யாக கூரையில் தீப்பிடித்தது. அந்த சமயத்தில் காற்றும் அதிகமாக அடிக்கவே, தீயானது மிக வேகமாக கூரையில் பரவியது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மிக வேகமாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தினர். எனினும் சிறப்பு யாகம் நடைபெற்ற இடத்தைச் சுற்றியுள்ள கீற்றுக்கொட்டகை முழுவதுமாக எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது