கோட்டையா? ஜெயிலா? சசிகலா முன் நிற்கும் இரண்டு கேள்விகள்
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இன்னும் ஓரிரு நாட்களில் தமிழக முதல்வர் பதவியை ஏற்கவுள்ளார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் சற்றுமுன் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த வாரம் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது
இந்த வழக்கின் பிரதான குற்றச்சாட்டுக்கு ஆளான ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டாலும் சசிகலா, இளரவசி, சுதாகரன் ஆகியோர்களுக்கு இந்த தீர்ப்பு முக்கியமானது. குறிப்பாக முதல்வர் பதவியை ஏற்கவிருக்கும் சசிகலாவுக்கு இந்த தீர்ப்பு மிக முக்கியமானது.
இந்த தீர்ப்பு சசிகலாவுக்கு பாதகமாக வந்தால் அவர் ஜெயிலுக்கும், சாதகமாக வந்தால் அவர் கோட்டைக்கும் செல்வார் என்று கூறப்படுகிறது. கோட்டையா, ஜெயிலா என்பதை தமிழக மக்களே பொறுத்திருந்து பாருங்கள்