ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே தற்போது அளித்துள்ளார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் காரணமாகவே அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு இருந்தது. உடல் பரிசோதனையில் நோய் தாெற்றால் கடுமையாக ஜெயலலிதா பாதிக்கப்பட்டிருந்தார்.
நோய் தொற்றுக்கான காரணத்தை தீவிரமாக ஆராய்ந்தோம். ஜெயலலிதாவின் இதயம், நுரையீரலில் நோய்தொற்று அதிகமாக இருந்தது. மருத்துவ முறைகளுக்குட்பட்டு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டிரக்கியோஸ்டோமி செய்தபின் சுயநினைவு திரும்பியது.
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஜெயலலிதா உணர்ந்தார். நோயாளியின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. கைரேகை வைத்தபோது ஜெயலலிதா பேசினார்.
மருத்துவமனையில் பல நேரங்களில் சசிகலாவை சந்தித்து பேசினேன். அவரிடமும் அனைத்து அதிகாரிகளிடமும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தினமும் விளக்கப்பட்டது.
நோயாளிகள் அறையில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்படுவதில்லை. இது ஒரு வழக்கமான நடைமுறைதான்