ஆண்டிப்பட்டியில் சசிகலா போட்டியா? ஆர்.கே. நகரில் ஏன் போட்டியிடவில்லை?

ஆண்டிப்பட்டியில் சசிகலா போட்டியா? ஆர்.கே. நகரில் ஏன் போட்டியிடவில்லை?

ஓ.பன்னீர் செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து இன்னும் ஓரிரு நாட்களில் சசிகலா முதல்வர் பதவியை கடும் எதிர்ப்புகள் இடையே ஏற்கவுள்ளார்.

இருப்பினும் அவர் ஆறு மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆக வேண்டும். தற்போது ஜெயலலிதா மறைவினால் காலியாக இருக்குக் ஆர்.கே நகரில் அவர் போட்டியிட விரும்பவில்லை. அங்கு அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இல்லை என உளவுத்துறை ரிப்போர்ட் அளித்ததே காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக உள்ள தொகுதி எது என்று உளவுப்பிரிவு போலீஸ் உயரதிகாரிகள் தமிழகம் முழுவதும் இருந்து உளவுப்பிரிவு போலீஸாரிடம் ரிப்போர்ட் கேட்டனர். உடனடியாக உளவுப்பிரிவு போலீஸாரும் மக்களின் மனநிலை, அரசியல் சூழ்நிலை ஆகியவற்றை கள ஆய்வு செய்ததில் தற்போதைக்கு பாதுகாப்பான தொகுதி ஆண்டிப்பட்டி என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply