இன்று நடைபெறவிருந்த சசிகலா பதவியேற்பு திடீர் ரத்து?
அதிமுக பொதுச்செயலாலர் சசிகலா இன்று முதல்வராக பதவியேற்பார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. பதவியேற்பு விழாவிற்காக சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபமும் தயாராக உள்ளது.
ஆனால் திடீரென கவர்னர் வித்யாசாகர் ராவ், டெல்லி சென்று இதுகுறித்து இந்திய அரசின் அட்டர்னி ஜெனரலுடன் ஆலோசனை நடத்தியதாகவும், இந்த பதவியேற்பு குறித்து அட்டர்னி ஜெனரல், ‘சசிகலா பதவியேற்பில் சட்டச் சிக்கல் ஏதும் இல்லை என்றாலும் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் வரை அதாவது ஒருவாரம் காத்திருப்பதில் தவறில்லை என்று கூறியதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
இதன் காரணமாக சசிகலா பதவியேற்புக்கு தேதி கொடுக்காமல் கவர்னர் வித்யாசாகர் ராவ், தனது குடும்பத்தினர்களுடன் மும்பை சென்றுவிட்டதாகவும், இதனால் சசிகலா தரப்பு அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.