ஆப்பிள் நிறுவனத்தின் அம்பாசிடர் ஆனார் அனிருத்

ஆப்பிள் நிறுவனத்தின் அம்பாசிடர் ஆனார் அனிருத்

உலகம் முழுவதும் பிரபலமான ஆப்பிள் மியூசிக் நிறுவனத்தின் இந்திய நிறுவனத்திற்கு பிராண்ட் அம்பாசிடராக பிரபல இசையமைப்பாளர் அனிருத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஃபேஸ்புக், டுவிட்டர் மூலம் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இதுகுறித்து அனிருத் தனது டுவிட்டரில் கூறியபோது, ‘ஆப்பிள் மியூசிக் இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக நான் தேர்வு செய்யப்பட்டதை பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

தென் இந்தியாவை சேர்ந்த ஒருவர் ஆப்பிள் மியூசிக் இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக தேர்வு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply