75 நாட்களில் ஒருநாள் கூட ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. ஓபிஎஸ்

75 நாட்களில் ஒருநாள் கூட ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. ஓபிஎஸ்

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தார். அந்த 75 நாட்களில் ஒருநாள் கூட நான் அவரை பார்க்கவில்லை. பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் ஒன்றை ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவத்

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த பொழுது 75 நாட்களும் நான் அப்பல்லோ சென்றேன். இருப்பினும் ஜெயலலிதாவை சசிகலா தவிர வேறு யாரும் சந்தித்ததாக கேள்வி படவில்லை, பார்க்கவும் இல்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது பார்க்க முடியாததை எண்ணி துர்பார்கியாக உணர்ந்தேன். ஜெயலலிதா இறந்த பின் அனைத்து சக்திகளையும் இழந்து விட்டோம். 75 நாட்கள் தொடர்ந்து அப்பல்லோ சென்றாலும் என்னால் ஒரு நாள் கூட ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை. அவரின் மரணம் கேட்டு மிகவும் வருந்தினேன்.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து சந்தேகத்திற்குரிய கேள்வியை எழுப்ப என் மனம் ஒப்பவில்லை. நான் யாரையும் தவறாக குறிப்பிடவும் விரும்பவில்லை. என்னை இவ்வாறு பேசு என யாரும் என்னை இயக்கவில்லை என முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த நேரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply