எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு பின் மெளனமாக திரும்பிய சசிகலா. தொடரும் மர்மங்கள்

எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு பின் மெளனமாக திரும்பிய சசிகலா. தொடரும் மர்மங்கள்

இன்று காலை சென்னை அதிமுக அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் சசிகலா தலைமையில் கூடியது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட நிலையில் இந்த கூட்டம் எதிர்பார்த்தவாறு நடைபெறவில்லை என்றும் இந்தக் கூட்டத்திற்கு 41 எம்.எல்.ஏ.,க்கள் வரவில்லை என்றும், அதனால் தான் சசிகலா செய்தியார்களை சந்திக்காமல் மெளனமாக போயஸ் கார்டன் திரும்பிவிட்டதாகவும் தெரிகிறது.

சசிகலா தலைமையிலான அதிமுகவில் மெஜாரிட்டி இல்லை என்பதையே இது காட்டுவதாகவும், எனவே கவர்னர் பதவியேற்க அழைப்பு விடுத்தாலும் அவர் சட்டமன்றத்தில் அதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு சசிகலா அணி தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு வலுத்து வருவதாகவும், சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பாதகமாக தீர்ப்பு வந்தால் சசிகலாவும் அவரது குடும்பத்தினர்களும் அதிமுகவில் இருந்து விரட்டப்படுவார்கள் அல்லது ஓரம்கட்டப்படுவார்கள் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன

Leave a Reply