அதிமுக எம்.எல்.ஏக்களை கடத்துகிறாரா சசிகலா?
இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. ஆனால் இந்த கூட்டத்தில் சசிகலா எதிர்பார்த்தபடி அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ளவில்லை. மேலும் இந்த கூட்டத்தில் 45 எம்.எல்.ஏக்கல் கலந்துகொள்ளாமல் புறக்கணித்ததாகவும், அவர்கள் ஓபிஎஸ் உடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகலா கூட்டத்தில் எந்தவித முக்கிய முடிவும் எடுக்கப்படாமல் முடிவடைந்தது. இந்நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்படவில்லை என்றும், அவர்கல் அனைவரும் 2 பேருந்துகளில் ரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் கூறப்பட்டது.
அதிமுக எம்.எல்.ஏக்கள் எங்கு அழைத்து செல்லப்படுகின்றனர் என்ற விபரம் யாருக்கும் தெரியவில்லை என்றும் சென்னைக்கு ஆளுனர் வரும் வரை அவர்கள் ரகசிய இடத்தில் வைத்திருக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.