அமைச்சர் செல்லூர் ராஜூவை காணவில்லை. சென்னை போலீஸில் புகார்

அமைச்சர் செல்லூர் ராஜூவை காணவில்லை. சென்னை போலீஸில் புகார்

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை காணவில்லை என்று மதுரையை சேர்ந்த செந்தில்முருகன் எனப்வர் சென்னை காவல்துறையில் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அதிமுக எம்.எல்.ஏக்கள் 130 பேர்களை ரகசிய இடத்தில் சிறை வைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதுகுறித்த வழக்கு ஒன்றும் இன்று சென்னை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் தங்கள் தொகுதி எம்.எல்.ஏவும், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த புகாருக்கு காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பதை தமிழக மக்கள் உற்று நோக்கியுள்ளனர்.

Leave a Reply