சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது. கவர்னரின் அறிக்கையின் உண்மையா?

சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது. கவர்னரின் அறிக்கையின் உண்மையா?

சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு, சசிகலாவை முன்மொழிந்த ஓபிஎஸ் அவர்களே தற்போது எதிர் அணியில், எம்.எல்.ஏக்கள் சுதந்திரமாகத்தான் உள்ளார்களா? ஆகிய காரணங்களால் உடனடியாக சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என கவர்னர் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.

பிரபல பத்திரிகை மூலம் இந்த அறிக்கை விஷயம் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் கவர்னர் மாளிகை இதுபோன்ற அறிக்கையை அனுப்பவில்லை என்று மறுத்துள்ளதால் குழப்பம் நிலவுகிறது.

கவர்னர் அனுப்பியதாக கூறப்படும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போதைய சூழ்நிலையில் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என்பது முக்கிய குறிப்பாக உள்ளது. சசிகலா முதல்வராக வரவேண்டும் என்று முன்மொழிந்த முதல்வர் ஓபிஎஸ் அவர்களே தற்போது எதிரணியில் இருப்பதாலும், சசிகலா மீதுள்ள வழக்கின் தீர்ப்பு நாள் நெருங்கிவிட்டது என்பதாலும் உடனடியாக சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் ஒருசில குற்றச்சாட்டுக்களை சசிகலா மீது குறிப்பிட்டுள்ளார். கடந்த 5ஆம் தேதி நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நடந்ட்தவை, தற்போது எம்.எல்.ஏக்களின் நிலைமை, குதிரை பேரத்திற்கான வாய்ப்பு ஆகியவை ஓபிஎஸ் கூறிய குற்றச்சாட்டுக்கள். இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டியது உள்ளதாகவும் எனவே தனக்கு இதுகுறித்து முடிவு எடுக்க இன்னும் கால அவகாசம் தேவை என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply