போயஸ் கார்டன் இல்லம் 24 மணி நேரத்தில் கைப்பற்றப்படுமா?
சசிகலா ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என்றே சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது அவர் வாழ்ந்து வரும் போயஸ் கார்டன் இல்லமும் பறிபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை அவருடைய நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்பதற்காக கையெழுத்து இயக்கம் ஒன்றை சற்றுமுன் முதல்வர் ஓபிஎஸ் ஆரம்பித்து வைத்துள்ளார். இந்த கையெழுத்து இயக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் கையெழுத்திட்டு வருகின்றனர். எனவே வெகுவிரைவில் போயஸ் கார்டன் இல்லம் கைப்பற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை 24 மணி நேரத்தில் தமிழக அரசு கைப்பற்ற வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இவருடைய கோரிக்கை நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்