திடீர் திருப்பம். ஓபிஎஸ்க்கு வெங்கையா நாயுடு ஆதரவு

திடீர் திருப்பம். ஓபிஎஸ்க்கு வெங்கையா நாயுடு ஆதரவு

தமிழகத்தின் ஆட்சியையும், அதிமுகவையும் யார் கைப்பற்றுவார் என்ற பரமபத விளையாட்டில் தொடர்ந்து மர்மம் இருந்து வரும் நிலையில் திடீரென ஓபிஎஸ் கூறிய கருத்து ஒன்றுக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா இல்லத்தை அவரது நினைவிடமாக மாற்றுவேன் என்று முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தெரிவித்தார். அதுமட்டுமின்றி இதற்காக அவர் ஒரு கையெழுத்து இயக்கம் ஒன்றை ஆரம்பித்து அதில் முதல் கையெழுத்தையும் போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் ‘வேதா இல்லம்’, அம்மா நினைவு இல்லமாக மாற வேண்டும் என்ற ஓபிஎஸ் கருத்துக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறியபோது, ”வேதா இல்லத்தை ஜெயலலிதாவின் நினைவிடமாக மாற்றும் யோசனையை வரவேற்கிறேன்.என்னை பொருத்தவரை இது ஒரு நல்ல விஷயம் என நினைக்கிறேன்.வேதா இல்லத்திற்கு தற்போது வரை யாரும் உரிமை கோராத நிலையில்,அது குறித்து அதிமுக நிர்வாகிகளும்,தொண்டர்களும்தான் முடிவு செய்ய வேண்டும்.இந்த முடிவில் மத்திய அரசு ஏதும் தலையிட முடியாது.”என வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

Leave a Reply