தமிழ்நாடு தப்பித்தது. நீதித்துறைக்கு பாராட்டு தெரிவித்த கங்கை அமரன்

தமிழ்நாடு தப்பித்தது. நீதித்துறைக்கு பாராட்டு தெரிவித்த கங்கை அமரன்

கடந்த 2014ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் குன்ஹா தீர்ப்பு அளித்தபோது தமிழ்நாடே குன்ஹாவை விமர்சித்தது. ஜெயலலிதாவுக்கு தண்டனையா? என்று கண்ணீர் விட்டு அழுதது. அதே தீர்ப்பு தான் இன்றும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக மக்கள் கண்ணீருக்கு பதிலாக பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார். எப்படி ஒரே தீர்ப்பு மக்கள் கொண்டாடவும், துன்பப்படவும் செய்யும். அன்று ஜெயலலிதா உயிரோடு இருந்தார், இன்று அவர் இல்லை. அன்று கிடைத்த தண்டனை ஜெயலலிதாவுக்கு மக்கள் கண்ணீர் விட்டனர். இன்று சசிகலாவுக்கு தண்டனை என்றவுடன் மக்கள் ஆனந்தப்படுகின்றனர்.

சசிகலாவால் பாதிக்கப்பட்ட பலர் தற்போது தைரியமாக முன்வந்து நீதித்துறையை பாராட்டி வருகின்றனர். அவர்களில் ஒருவர் பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன். அவருடைய பண்ணைவீடு சொத்து ஒன்றை சசிகலா தரப்பினர் மிரட்டி எழுதி வாங்கியதால் ஏற்பட்ட பாதிப்பை இத்தனை வருடங்களாக மறைத்து வைத்தவர் தற்போது தைரியமாக வெளியே சொல்லியுள்ளார்/.

இந்த தீர்ப்பால் தமிழ்நாடு தப்பித்துள்ளது என்று கூறிய கங்கை அமரனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Leave a Reply