இஸ்ரோ உலக சாதனை. ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கொள்களை அனுப்பியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் கடந்த சில வருடங்களாக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்து ஆய்வுகள் மேற்கொண்டு வரும் நிலையில் இன்று ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனை செய்துள்ளது. இந்த சாதனைக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பி.எஸ்.எல்.வி சி-37 என்று கூறப்படும் ராக்கெட் ஒன்றின் மூலம், இந்தியாவின் கார்டோசாட்-2 செயற்கைக் கோள், ஐஎன்எஸ்-1ஏ, ஐஎன்எஸ் 1-பி என 2 நானோ செயற்கைக் கோள்கள், இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்குச் சொந்தமான 5 நானோ செயற்கைக் கோள், அமெரிக்காவின் 96 நானோ செயற்கைக் கோள்கள் உள்பட 104 செயற்கைக்கோள்களை இணைத்து இன்று விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த சாதனைக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.