அதிமுகவை மீட்கும் வரை தர்மயுத்தம் தொடரும். ஓபிஎஸ்
சசிகலா முதல்வர் பதவியேற்பதை எதிர்த்து கடந்த 7ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்த முதல்வர் ஓபிஎஸ், அதிமுகவில் ஒரு பெரும் சலசலப்பை ஏற்படுத்தினார். அதிமுக இரண்டாக உடைந்து சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என பிளவுபட்டது.
சசிகலா மீதுள்ள வழக்கை காரணம் காட்டி கவர்னர் அவரை ஆட்சி அமைக்க அழைக்காத நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பு அவருக்கு எதிராகவே அமைந்தது.
இந்நிலையில் சசிகலா தனது ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராகவும், டிடிவி தினகரனை அதிமுக துணை பொதுச்செய்லாளராகவும் அறிவித்துவிட்டு சிறை சென்றார்
இந்நிலையில் ஆட்சி அமைக்க கவர்னர் எடபாடி பழனிச்சாமியை அழைத்ததை அடுத்து இன்று மாலை அவர் முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்., இந்நிலையில் தனது நிலை குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த ஓபிஎஸ், ‘அ.தி.மு.க., கட்சியும், தமிழக ஆட்சியும் ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கியுள்ளது. அதை மீட்கும் வரை இந்த தர்ம யுத்தம் தொடரும்.’ என்று கூறினார்.