அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கம். மதுசூதனன் அதிரடி அறிவிப்பு

அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கம். மதுசூதனன் அதிரடி அறிவிப்பு

கடந்த சில நாட்களாக அதிமுகவின் சசிகலா அணியும், ஓபிஎஸ் அணியும் செய்யும் ஒருசில செயல்களை மக்கள் காமெடி என நினைத்து ரசித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இரு அணியினர்களும் ஒருவரை ஒருவர் கட்சியில் இருந்து நீக்கிக்கொண்டிருக்கும் காட்சி காமெடியின் உச்சகட்டமாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் அனைவரையும் சசிகலா தரப்பு நீக்கியது.

இந்த காமெடிக்கே இன்னும் பொதுமக்கள் சிரித்து முடிக்காத நிலையில் தற்போது சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் டாக்டர் வெங்கடேஷ் ஆகிய மூவரையும் அதிமுகவில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அணியின் ஆதரவாளர் மதுசூதனன் அறிவித்துள்ளார். ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட டிடிவி தினகரன், வெங்கடேஷ் எந்த அதிகாரமும் இல்லாமல் கட்சியில் சேர்க்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இன்னும் என்னென்ன காமெடிகளை தமிழக மக்கள் பார்க்க இருக்கின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply