சசிகலா நாட்டுக்காக போராடியா சிறையில் உள்ளார்? எந்த சலுகையும் கிடையாது. பெங்களூர் சிறை அதிகாரி
நாட்டுக்காக போராடிவிட்டு சசிகலா சிறைக்கு வர வில்லை என்றும், எனவே அவருக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்றும் கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி சத்திய நாராயணராவ் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று நீதிமன்றத்தில் சரணடைந்த அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சசிகலா சிறை வாசம் குறித்து கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயணராவ் பேட்டியளித்துள்ளால். அதில், மற்ற கைதிகளைப் போன்று சசிகலாவுக்கு உணவு வழங்கப்படுவதாகவும், அவர் மிகவும் அமைதியாக காணப்படுவதாகவும் கூறியுள்ளார். இங்கு வரும் அனைத்து கைதிகளும் குற்றவாளிகள் தான் என குறிப்பிட்ட டிஜிபி., சசிகலாவுக்கு எந்த சிறப்பு அறையும் வழங்கப்படவில்லை என்றும், மற்ற கைதி களுக்கு வழங்கப்படுவதைப் போல சாதாரண அறையே ஒதுக்கப்பட்டுள்ளகவும் தெரிவித்தார்.
கைதிகள் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடக்கூடாது என்பதற்காக மற்ற கைதியுடன் தங்க வைக்கப்படுவார்கள் என்றும், சசிகலா கேட்டுக் கொண்டதால் அவருடன் இளவரசி மட்டும் தங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். முறைகேடாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை பெற்றதாலே சசிகலா சிறையில் அடைக்கப் பட்டுள்ளதாகவும், அவர் நாட்டுக்காக போராடி சிறைக்கு வரவில்லை என்றும் கூறினார்.
சிறையில் சசிகலா எந்த வேலையும் செய்யவில்லை என தெரிவித்துள்ள டிஜிபி சத்யநாராயணராவ், அவர் தேவைப்பட்டால் விரும்பும் வேலையை செய்யலாம் என்றும், அதற்கான பயிற்சி அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்