ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லர் பயன்படுத்திய டெலிபோன் ஏலம்
உலகையே ஆட்டிப்படைத்த ஜெர்மனி நாட்டின் சல்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் 2-வது உலகப் போரில் முக்கிய பங்கு வகித்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.
ஹிட்லர் உலகப்போரின்போது தனிப்பட்ட டெலிபோன் ஒன்றை பயன்படுத்தினார். சிவப்பு நிறமுடைய இந்த டெலிபொன் மூலம் தான் ஹிட்லர் இரண்டாம் உலகப்போரின்பொது தனது அதிகாரம் மிக்க உத்தரவுகளை பிறப்பித்ததாக வரலாறு கூறுகிறது. இந்த போர் உலகையே அச்சுறுத்தி பேரழிவை ஏற்படுத்தியது.
பல ஆயிரக்கணக்கான அப்பாவிகள் பலியாக டெலிபோன் மூலம் உத்தரவிட்டவர் ஹிட்லர். இந்த டெலிபோன் தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது. ஹிட்லர் பயன்படுத்திய இந்த டெலிபோன் இங்கிலாந்து பிரிகேடியர் சர்ரால்ப்பின் மகனிடம் உள்ளது. ஏலத்தொகை ரூ.80 லட்சத்து 56 ஆயிரத்து 700 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ரூ.3 கோடிக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது..
இந்த டெலிபோன் கடந்த 1945-ம் ஆண்டு ஜெர்மனியின் பெர்லின் நகரில் ஒரு பாதுகாப்பு கிடங்கு அறையில் கண்டு பிடிக்கப்பட்டது. போரின் முடிவில் ஜெர்மனி சரண் அடைந்த பிறகு சோவியத் ரஷிய வீரர்கள் அதை மீட்டு இங்கிலாந்து பிரிகேடியர் சர் ரால்ப் ராய்னரிடம் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.