இஸ்ரோவை கிண்டலடித்த அமெரிக்க ஊடகம். பதிலடி கொடுத்த டைம்ஸ் ஆப் இந்தியாவின் கார்ட்டூன்
சமீபத்தில் இந்திய விண்வெளித்துறை ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை அனுப்பி உலக சாதனை செய்தது. இந்த சாதனையை உலக நாடுகள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரோ இதற்கு முன்னர் செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் விண்கலத்தை அனுப்பியபோது அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்த கேலிக்கு டைம்ஸ் ஆப் இந்தியா தற்போது பதிலடி கொடுத்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு மங்கள்யான் செயற்கை கோளை அனுப்பிய போது அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான நியூயார்க் டைம்ஸ் இஸ்ரோவின் முயற்சியை கிண்டலடித்து மாடு மேய்ப்பவர்கள் எல்லாம் விண்கலம் விடுகிறார்கள் என்று கார்டூன் ஒன்றை வெளியிட்டிருந்தது.
இந்த கார்ட்டுனுகு தற்போது டைம்ஸ் ஆப் இந்தியா பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு கார்ட்டூன் வெளியிட்டுள்ளது. அதில் ‘மாடு மேய்ப்பவர்களான இந்தியரிடம் தான் அமெரிக்கர்கள் தங்களது செயற்க்கை கோளை விண்ணில் செலுத்துமாறு வேண்டி கொண்டனர் “என்ற அர்த்தம் வருமாறு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது அனுப்பப்பட ராக்கெட்டில் இருந்த 104 செயற்கைகோள்களில் 8 அமெரிக்காவை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.