ஸ்டாலினை சந்திக்க ஜனாதிபதி அனுமதி. சட்டப்பேரவை குறித்து நேரில் விளக்குகிறார்

ஸ்டாலினை சந்திக்க ஜனாதிபதி அனுமதி. சட்டப்பேரவை குறித்து நேரில் விளக்குகிறார்

கடந்த சனிக்கிழமை அன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது ஏற்பட்ட அமளி காரணமாக மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சபைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு நடந்த வாக்கெடுப்பு செல்லாது என்று ஏற்கனவே ஸ்டாலின், கவர்னரிடம் மனு கொடுத்திருக்கும் நிலையில் இதுகுறித்து ஜனாதிபதியிடம் முறையிட அனுமதி கேட்டிருந்தார். தற்போது ஸ்டாலினை சந்திக்க ஜனாதிபதி ஒப்புக்கொண்டு வரும் 23ஆம் தேதி அப்பாயின்மெண்ட் கொடுத்துள்ளார்

ஏற்கனவே இதுகுறித்த வழக்கு ஒன்று இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது. கவர்னரிடம் சட்டசபை செயலாளர் அறிக்கை அளித்துள்ளர். இந்த நிலையில் ஸ்டாலின், ஜனாதிபதியை சந்திப்பது முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave a Reply