தயாரிப்பாளர் சங்க தேர்தல். விஷால் போட்டியிட தடையில்லை. நீதிமன்றம் உத்தரவு

தயாரிப்பாளர் சங்க தேர்தல். விஷால் போட்டியிட தடையில்லை. நீதிமன்றம் உத்தரவு

நடிகர் சங்க தேர்தலில் செயலாளர் பதவியில் இருக்கும் நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நிற்க தகுதியற்றவர் என்று அறிவிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் நடிகர் சங்கத்தை சேர்ந்த விஷாலின் மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது சரியானதே என்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட நடிகர் விஷாலுக்கு தடையில்லை என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதனால் நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட இருந்த தடை நீங்கிவிட்டது. நடிகர் சங்கத்தை தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சரத்குமார் மற்றும் ராதாரவியிடம் இருந்து கைப்பற்றியது போல, தயாரிப்பாளர் சங்கத்தையும் அவர் கைப்பற்றுவார் என்று கோலிவுட் எதிர்பார்க்கின்றது.

தற்போதைய நிர்வாகிகள் மீது கடும் அதிருப்தி உள்ளதால் இளையதலைமுறை தயாரிப்பாளர் கையில் சங்கம் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply