ஐபிஎல் 2017: 8 அணிகள் ஏலம் எடுத்த வீரர்களின் முழு விபரம்
10வது ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் 5 முதல் கோலாகலமாக தொடங்கவுள்ள நிலையில் நேற்று முன் தினம் பெங்களூரில் வீரர்களின் ஏலம் நடைபெற்றது. இதில் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் எட்டு அணிகளும் ஏலம் எடுத்த வீரர்களின் விபரங்கள் பின்வருமாறு:
டெல்லி டேர்டேவில்ஸ்:
9 வீரர்களை மொத்தம் ரூ.14.05 கோடிக்கு ஏலம் எடுத்தது. ரபாடா (ரூ.5 கோடி), பேட்ரிக் கம்மின்ஸ் (ரூ.4.5 கோடி), மேத்யூவ்ஸ் (ரூ.2 கோடி), கோரே ஆண்டர்சன் (ரூ.1 கோடி), முருகன் அஸ்வின் (ரூ.1 கோடி), ஆதித்யா தாரே (ரூ.25 லட்சம்), அங்கீத் பாவ்னி, நவ்தீப் ஷைனி, ஷசாங்க் சிங் (தலா ரூ.10 லட்சம்).
குஜராத் லயன்ஸ்:
11 வீரர்களை மொத்தம் ரூ.3.85 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஜேசன் ராய் (ரூ.1 கோடி), பாசில் தாம்பி (ரூ.85 லட்சம்), மன்பிரித் கோனி (ரூ.60 லட்சம்), நது சிங் (ரூ.50 லட்சம்), முனாப் படேல் (ரூ.30 லட்சம்), ஆகாஷ்தீப் நாத், சுபர் அகர்வால், தேஜாஸ் சிங் பரோகா, சிராக் சூரி, ஷெல்லே சவுர்யா, பிரதாம் சிங், ஷெல்லி சவுர்யா (தலா ரூ.10 லட்சம்).
கிங்ஸ் லெவன் பஞ்சாப்:
8 வீரர்களை மொத்தம் ரூ.9.45 கோடிக்கு ஏலம் எடுத்தது. நடராஜன் (ரூ.3 கோடி), வருண் ஆரோன் (ரூ.2.80 கோடி), மோர்கன் (ரூ.2 கோடி), மேட் ஹென்றி (ரூ.50 லட்சம்), மார்ட்டின் கப்தில் (ரூ.50 லட்சம்), டேரன் சமி (ரூ.30 லட்சம்), ராகுல் டிவாட்டியா (ரூ.25 லட்சம்), ரங்கு சிங் (ரூ.10 லட்சம்).
கொல்கத்தா நைட்ரைடர்ஸ்:
9 வீரர்களை மொத்தம் ரூ.14.35 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. டிரென் போல்ட் (ரூ.5 கோடி), கிறிஸ் வோக்ஸ் (ரூ.4.20 கோடி), நாதன் கவுல்ட்டர் (ரூ.3.50 கோடி), ரிஷி தவண் (ரூ.55 லட்சம்), டேரன் பிராவோ (ரூ.50 லட்சம்), ரோவ்மன் பொவல் (ரூ.30 லட்சம்), சயன் கோஷ், சஞ்ஜெய் யாதவ், இஷாங்க் ஜக்கி (தலா ரூ.10 லட்சம்).
மும்பை இந்தியன்ஸ்:
7 வீர்களை மொத்தம் ரூ.8.20 கோடிக்கு ஏலம் எடுத்தது. கரண் சர்மா (ரூ.3.20 கோடி), கிருஷ்ணப்பா கவுதம் (ரூ.2 கோடி), மிட்செல் ஜாண்சன் (ரூ.2 கோடி), அசேல குணரத்னே (ரூ.30 லட்சம்), சவுரப் திவாரி (ரூ.30 லட்சம்), நிக்கோலஸ் பூரன் (ரூ.30 லட்சம்), குல்வந்த் கேஜ்ரோலியா (ரூ.10 லட்சம்),
ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ்:
9 வீரர்களை மொத்தம் ரூ.17.20 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் (ரூ.14.50 கோடி), டேன் கிறிஸ்டியன் (ரூ.1 கோடி), மனோஜ் திவாரி (ரூ.50 லட்சம்), லூக்கி பெர்குசன் (ரூ.50 லட்சம்), ஜெயதேவ் உனத்கட் (ரூ.30 லட்சம்), ராகுல் ஷாகர், சவுரப் குமார், மிலிந்த் தாண்டன், ராகுல் அஜெய் திரிபாதி (தலா ரூ.10 லட்சம்).
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
ரூ.15.40 கோடிக்கு மொத்தம் 5 வீரர்களை ஏலம் எடுத்துள்ளது. டைமால் மில்ஸ் (ரூ.12 கோடி), அனிகெட் சவுத்ரி (ரூ.2 கோடி), பவென் நெகி (ரூ.1 கோடி), பில்லி ஸ்டான்லேக் (ரூ.30 லட்சம்), பிரவீன் டூபே (ரூ.10 லட்சம்).
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்:
8 வீரர்களை மொத்தம் ரூ.8.65 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. ரஷித் கான் அர்மான் (ரூ.4 கோடி), முகமது சிராஜ் (ரூ.2.60 கோடி), எக்லாவ்ய திவேதி (ரூ.75 லட்சம்), கிறிஸ் ஜோர்டான் (ரூ.50 லட்சம்), முகமது நபி (ரூ.30 லட்சம்), பென் லாஹ்லின் (ரூ.30 லட்சம்), பிரவீன் தாம்பே, தன்மே அகர்வால் (தலா ரூ.10 லட்சம்).