நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த திமுகவின் வழக்கு. ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கை வரும் 27ஆம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் ஒத்தி வைத்தது.
இன்று கண்டிப்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்றும் இதன்மூலம் தமிழக மக்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைக்கும் என்றும் காத்திருந்த திமுகவுக்கும், தமிழக மக்களுக்கும் ஏமாற்றம்தான் கிடைத்துள்ளது.
இருப்பினும் இன்னும் ஐந்து நாட்கள் பொறுத்திருந்து இந்த வழக்கு என்ன திருப்பத்தை கொடுக்கவுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.