பிரிட்டனின் காஸ்ட்லியான ஆடம்பர பஸ் ஸ்டாப்?
நம்மூரில் பஸ் ஸ்டாப் எப்படி இருக்கும் என்பது தெரிந்ததே. பல பல பஸ்டாப்களில் மேற்கூரையே இருக்காது என்பதும் பயணிகள் வெயில் மற்றும் மழையில் துன்புறுவர் என்பதும் அனைவரும் அறிந்ததே.
ஆனால் பிரிட்டன் நாட்டில் உள்ள Devon என்ற கிராமத்தில் உள்ள பஸ் ஸ்டாப் கண்ணை கவரும் வகையில் ஆடம்பரமாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு சிறிய வீடு போன்ற தோற்றத்துடன், அழகிய டெக்கரேசன் வேலைப்பாடுகளுடன் உள்ள இந்த பஸ் ஸ்டாப்பில் பயணிகள் உட்காருவதற்கு குஷன் நாற்காலி, சுவர்களில் அழகிய புகைப்படங்கள் என அசத்தியுள்ளது.
இந்த பேருந்து நிலையத்தை அப்பகுதியின் கவுன்சிலர் தன்னுடைய முயற்சியில் உருவாக்கி கடந்த காதலர் தினத்தில் திறந்துவைத்துள்ளார்.
இந்த பஸ் ஸ்டாப்பிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதால் இதே போன்று இன்னும் அதிக பஸ் ஸ்டாப்புகளை உருவாக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.