ஈபிஎஸ்-க்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த ஓபிஎஸ் ஆதரவாளர் மரணம்
கடந்த வாரம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. இதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா நகரைச் சேர்ந்த நகர மேலவை அதிமுக உறுப்பினர் ஆறுமுகம் என்பவர் ஈபிஎஸ் முதல்வர் பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்தார்.
படுகாயம் அடைந்த ஆறுமுகம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைய்யில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மரணம் அடைந்த ஓபிஎஸ் ஆதரவாளர் ஆறுமுகத்தின் உடலுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.