டிரம்ப் அதிரடி உத்தரவால் 3 லட்சம் இந்தியர்களுக்கு பாதிப்பு

டிரம்ப் அதிரடி உத்தரவால் 3 லட்சம் இந்தியர்களுக்கு பாதிப்பு

அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றது முதல் டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நடவடிக்கைகளால் அவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி கிடைத்து கொண்டே உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார் 3 லட்சம் இந்தியர்கள் உட்பட 1.1 கோடி வெளிநாட்டினரை வெளியேற்றுவது குறித்து டிரம்ப் அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தானாக முன்வந்து நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் விதிகளை மீறி அமெரிக்காவில் இருப்பர்களை கைது செய்யவோ, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்படுவதாகவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சுமார் 3 லட்சம் இந்தியர்கள் உட்பட 1.1 கோடி வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், அந்நாட்டு அரசின் கெடுபிடி காரணமாக இவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் டிரம்ப் அரசின் இந்த உத்தரவுகளுக்கு ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply