கட்சி அல்ல, வெறும் அமைப்புதான். ‘எம்.ஜி.ஆர், அம்மா தீபா பேரவை’ தொடக்க விழாவில் தீபா

கட்சி அல்ல, வெறும் அமைப்புதான். ‘எம்.ஜி.ஆர், அம்மா தீபா பேரவை’ தொடக்க விழாவில் தீபா

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அரசியலில் குதிக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் நேற்று அவர் புதிய கட்சி தொடங்கியுள்ளார். ஆனால் இது அரசியல் கட்சி அல்ல என்றும் இது ஒரு அமைப்பு என்று மட்டுமே அவர் கூறியிருந்தாலும் இதை ஒரு அரசியல் கட்சியாகவே அவரது ஆதரவாளர்கள் பார்க்கின்றனர்.

‘எம்.ஜி.ஆர், அம்மா தீபா பேரவை’ என்பவதே அவருடைய புதிய அமைப்பின் பெயர்.  இந்த கட்சியின் கொடியில் கருப்பு,சிவப்பு நிறத்தில் நடுவில் வெள்ளை வட்டம் உள்ளது. அந்த வட்டத்தில் ஜெயலலிதாவுக்கு எம்ஜிஆர் செங்கோல் கொடுத்த படம் பொறிக்கப்பட்டுள்ளது.

கட்சி பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்த பின்னர் அவர் தொண்டர்களிடையே கூறியதாவது: ‘உண்மையான அதிமுக தொண்டர்கள் தன்னுடைய பின்னால் உள்ளதாகவும், இதனால் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை கண்டிப்பாக மீட்பேன் என்றும் கூறினார். மேலும் ஜெயலலிதா எந்த தவறும் செய்யாதவர் என்று கூறிய தீபா, எம்.ஜி.ஆர், அம்மா தீபா பேரவையின் பொருளாளராக செயல்படவுள்ளதாகவும், வரும் இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே.நகரில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

Leave a Reply