சர்வாதிகாரியை கடவுள் என்று அழைத்த நபருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை

சர்வாதிகாரியை கடவுள் என்று அழைத்த நபருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை

ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர், இரண்டாம் உலகப்போரினோது பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தார். இந்நிலையில் ஹிட்லரை  தன்னுடைய கடவுள் என அழைத்த இங்கிலாந்து நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சீன் கிரீக்டன் என்ற நபர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது வலதுசாரி சிந்தனை மற்றும் ஹிட்லரின் நாஜிக் கருத்துக்களை பதிவு செய்து வந்தார். இவருடைய பதிவுகளுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்து வந்து கொண்டிருந்தது

இந்நிலையில் உச்சமாக,  ஹிட்லர்தான் தன்னுடைய கடவுள் என்றும் இஸ்லாமியர்கள் மற்றும் யூதர்களை கொல்வதற்க்காக அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்றும் சமீபத்தில் பதிவு செய்திருந்தார்.

உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுத்த லண்டன் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.  சீன் கிரீக்டன் மீதான குற்றத்தை விசாரித்த லண்டன் நீதிமன்றம், நாஜிக் கொள்கைகளை பின்பற்றியதற்காகவும், ஹிட்லரை கடவுள் என அழைத்தற்காகவும் சீன் கிரீக்டனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply