விஜய் 61: நித்யா மேனனை அடுத்து விஜய்யுடன் இணையும் காஜல் அகர்வால்

விஜய் 61: நித்யா மேனனை அடுத்து விஜய்யுடன் இணையும் காஜல் அகர்வால்

இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘விஜய் 61’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படப்பிடிப்பில் விஜய்-நித்யாமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றது. மேலும் நித்யாமேனன் காட்சிகள் 80% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், அவருடைய நடிப்பு திருப்தி அளிக்கும் வகையில் இருந்ததாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மார்ச் மாதம் 6ஆம் தேதி முதல் தொடங்குகிறது என்று கூறப்படுகிறது. இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் விஜய்-காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகளில் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அதனையடுத்து படக்குழு வெளிநாட்டுக்கு செல்லவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், வடிவேலு, சத்யராஜ், கோவை சரளா மற்றும் எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். அட்லி இயக்கி வரும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் மூவீஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

Leave a Reply