மைசூர் கோவிலில் ஒளிவடிவில் சாய்பாபா. பக்தர்கள் ஆச்சர்யம்

மைசூர் கோவிலில் ஒளிவடிவில் சாய்பாபா. பக்தர்கள் ஆச்சர்யம்

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே உண்சூர் என்ற பகுதியில் உள்ள ஷிர்டி சாய்பாபா கோயிலில் ஒளி வடிவில் சாய்பாபா தோன்றியதால் பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஒளிவடிவ சாய்பாபா அந்த கோவிலில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானதால் வெளியே தெரிய வந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான சாய்பா பக்தர்கள் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். மேலும் வீடியோவை பார்த்த பலர் அந்த கோவிலுக்கு நேரடியாக சென்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

முதலில் இந்த வீடியோவை கடந்த மாதம் 27ஆம் தேதி கோவில் ஊழியர் ஒருவர் தற்செயலாக பார்த்துள்ளார். முதலில் ஒளி வடிவத்தில் ஏதோ உருவம் தோன்றியதாக தெரியவே பின்னர் அதை உற்று பார்த்தபோதுதான் அது சாய்பாபாவின் ஒளி உருவம் என தெரியவந்ததாகவும், எந்த இடத்தில் இருந்து ஒளி வந்ததோ அந்த இடத்திற்கு ஓடி சென்று அந்த ஊழியர் பார்த்தபோது, அந்த இடத்தில் பாபா ஒளி இல்லை என்றும் ஆனால், மீண்டும் வீடியோவில் பார்த்தபோது ஒளி இருந்தது கண்டு ஆச்சரியம் அடைந்ததாகவும் கூறினார். இதுகுறித்து கோயில் நிர்வாகத்துக்கு அந்த ஊழியர் தகவல் கொடுக்க, அவர்களும் அந்த வீடியோவைப் பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கோவில் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ”காலை 7.30 மணி அளவில் சிசிடிவி அறையில் அமர்ந்திருந்தேன். நான் எத்தேச்சையாக சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்த்துக் கொண்டு இருந்தேன். அப்போது, திடீரென அந்த வீடியோவில் இருந்து ஷிர்டி சாய்பாபாவின் ஒளி வடிவம் தெரிந்தது. வெள்ளை நிறத்தில் அந்த உருவம் காணப்பட்டது. உடனடியாக நான் ஒளி உருவம் தோன்றிய இடத்திற்கு ஓடிச் சென்று பார்த்தேன். அப்போது ஒளி உருவம் தெரியவில்லை” என்று கூறினார்.
இந்த சம்பவத்தையடுத்து, அந்தக் கோயிலுக்கு பாபாவைப் பார்க்க பக்தர்களின் கூட்டம் குவிந்து வருகிறது.

Leave a Reply