ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம். விரைவில் அமல்

ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம். விரைவில் அமல்

மூத்த குடிமக்கள் ரயில் டிக்கெட்டுகளுக்கான சலுகைகளைப் பெற வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஆதார் எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் ஆன்லைனில் முன்பதிவு செய்யவும் ஆதார் கட்டாயம் என்ற திட்டம் வரவுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் போலி அடையாள அட்டைகள் மூலம் அதிக எண்ணிக்கைகளில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது தடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் நாடு முழுதும் ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் 6,000 பி.ஓ.எஸ் இயந்திரங்களையும், நாடு முழுதும் 1,000 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களையும் வெகுவிரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் அறிவித்தார். அதுமட்டுமின்றி டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்கும் வகையில் ஒருங்கிணைந்த டிக்கெட் ஆப் ஒன்றையும் வரும் மே மாதம் அறிமுகம் செய்ய உள்ளதாக அவர் கூறினார்.

“ஐஆர்சிடிசி இணையத்தில் ஒருமுறை ஆதார் எண் பதிவு செய்துவிட்டால் போதும் என்றும் இதற்கான ரயில்வே மென்பொருள் ஒன்றையும் ரயில்வே துறை தயாரித்து வருவதாகவும் ரயில்வே உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply