நாடாளுமன்றத்திலும் அதிமுக பிரிந்தது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து அதிமுக சசிகலா, ஓபிஎஸ் என இருபிரிவுகளாக பிளவுபட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் 122 பேர் சசிகலா அணியிலும், 11 பேர் ஓபிஎஸ் அணியிலும் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிமுக உறுப்பினர்கள் பிளவுபட்டுள்ளனர். நாட்டின் 3வது மிகப்பெரிய கட்சியாக இருந்த அதிமுக இந்த பிளவு காரணமாக தற்போது அந்த பெருமையை இழந்துள்ளது.
மாநிலங்களவையில் மொத்தம் உள்ள 13 உறுப்பினர்களில் 10 பேர் சசிகலா அணியிலும், 2 பேர் ஒ.பன்னீர்செல்வம் அணியாகவும் பிரிந்துள்ளனர். அதேபோல் மக்களவையில் மொத்தம் உள்ள 37 உறுப்பினர்களில், 27 பேர் சசிகலாவுக்கும், 10 பேர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் ஆதரவாக உள்ளனர்