தீவிரவாத நாடு பட்டியலில் பட்டியலில் வடகொரியா? அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
வடகொரியா அதிபர் ஜாங் அன் அவ்வப்போது அணுகுண்டு சோதனை நடத்தி அமெரிக்கா உள்பட உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் கொடுத்து வருவதால் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 13ஆம் தேதி, வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னின் அண்ணன் கிம் ஜாங் நாம் மலேசியா விமான நிலையத்தில் கொல்லப்பட்டார். அந்த நிகழ்வு வடகொரியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனது சொந்த அண்ணனையே வடகொரிய அதிபர் இரண்டு பெண்களை வைத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வடகொரிய மக்களுக்கும், உலக நாடுகளுக்கும் அச்சுறுத்தல் கொடுத்து வரும் வடகொரியாவை தீவிரவாதிகள் நாடுகள் பட்டியலில் சேர்க்க அமெரிக்கா முயற்சித்து வருவதாக தென்கொரியா மற்றும் ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
இதனால் வடகொரியா அதிர்ச்சி அடைந்துள்ளது. இதுகுறித்து வடகொரியா வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியபோது, ‘வடகொரியா தீவிரவாதத்திற்கு எதிரான நாடு என்றும் தீவிரவாத நாடுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டால், அமெரிக்க கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.