சபதம் செய்த சசிகலாவை பரோலில் எடுப்போம். அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி
முன்னள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் மூன்று முறை ஓங்கி அடித்து சபதம் செய்த பின்னர் சிறைக்கு சென்ற சசிகலாவை, பரோலில் எடுப்போம் என அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சபதம் எடுத்துள்ளார்
சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரையும் உச்சநிதிமன்றம் குற்றவாளியாக அறிவித்து அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைய தண்டனை விதித்தது. இதனையடுத்து சசிகலா பெங்களூர் சிறையில் தண்டனைப் பெற்று வருகிறார். தமிழக அரசை சசிகலா தான் சிறையில் இருந்து இயக்குவதாக கூறப்படுகிறாது.
இந்தநிலையில் சொத்துகுவிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட தண்டையை ஏதிர்த்து மறுசிராய்வு மனு தாக்கல் செய்யும் முனைப்பில் சசிகலா தரப்பினர் ஈடுப்பட்டு வருகின்றனர், மேலும் சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றும் முயற்சிகளும் நடைப்பெற்று வருகின்றது.
இந்நிலையில் நேற்று திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ,” சசிகலாவை பரோலில் எடுப்போம் , அதற்கான வழிமுறைகள் குறித்து சட்ட வல்லுநர்களிம் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளோம்” என்று கூறினார்,.